உதகை தூய இருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி.!!

நீலகிரி மாவட்ட உதகை அரசு தாவிரியில் பூங்கா செல்லும் வழியில் உள்ளது தூய இருதய ஆண்டவர்
மேல்நிலை பள்ளியின் 45 வருட சாதனை காலங்களை நினைவூட்டும் வகையில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்களும் படித்த முன்னாள் மாணவ மாணவிகளின் உயர்ந்த அரசுப் பணிகளிலும் இடம் பெற்று பள்ளிக்கு புகழை சேர்த்து வரும் நிலையில், தூய இறுதிய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை நிர்வாகம் ஆணைக்கிணங்க முன்னாள் மாணவ மாணவிகளின் அமைப்புக் குழுவினர் அனைவருக்கும் அழைப்பு தந்து வரவேற்றனர். சிறப்பு விழாவினை பள்ளியின் துணை ஆசிரியர் சுப்பிரியர் சிஸ்டர் பவுலின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் மாணவ மாணவிகள் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ச்சியாக அனைவரையும் வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூர்த்தி, ரமேஷ், ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது மற்றும் பள்ளியின் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் வருகை தந்த அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் தற்போதைய பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டு முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு விழாவிற்கு வருகை புரிந்த முன்னாள் ஆசிரியர்களையும் மாணவ மாணவிகளையும் வரவேற்கும் விதமாக சிறப்புரையாற்றினார். விழா தொடர்ச்சியாக வருகை தந்த முன்னாள் மாணவ மாணவிகள் கூறியதாவது இதுபோன்ற தருணத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். தொடர்ந்து இனிவரும் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற உதவிகளை பள்ளிக்கு அளிப்போம் என்ற உறுதியினை ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்வில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாங்கள் பள்ளிப் பருவத்திற்கு வந்தபோது பல அனுபவங்களையும் நினைவுகளும் எங்கள் மனதில் பதிவாகியுள்ளது என்றனர். நாங்கள் படித்த பள்ளியை பார்த்தபோது படித்த நாட்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம், இந்த அருமையான சந்திப்பை ஏற்படுத்திய முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஜூலியன், டெய்சி, பாரத், கவிப்பிரியா, அருண் ஜோசப், ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏற்பாடு செய்த தற்போதைய பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கி விழா நிறைவு பெற்றது..