கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 – ந் தேதி பயிற்சி முடித்த போலீசார் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நேற்று மீண்டும் சந்தித்தனர் . 1984 பிரிவு ஓய்வு பெற்றகாவல்துறை அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சங்கத்தின் முதல் சந்திப்பு கூட்டம் இதுவாகும் ..இந்த விழாவுக்கு சங்கத்தின் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருத்தினராக கோவை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் மானுவேல்கலந்து கொண்டார்..இந்த நிகழ்ச்சியில் 1984 ஆம் ஆண்டு பயிற்சி முடித்த கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், , மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் திருநெல்வேலி,தூத்துக்குடி கன்னியாகுமரிமாவட்டங்களைச் சேர்ந்தஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வரை 121 பேர் பங்கேற்றனர். இவர்களில் 17 பேர் தற்போதும் காவல்பணியில் உள்ளார்கள். இவர்கள் கலந்துரையாடினார்கள்.ஒருவருக்கொருவர் குடும்ப நலன் விசாரித்து, பாசத்தை பரிமாறிக் கொண்டனர். இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவது எனவும் சங்க உறுப்பினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் அனைவரும் பங்கேற்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் சரவணன் வேலுசாமி நன்றி கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0