கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செட்டிபுதூரில் ஒட்டல் நடத்தியவர் மூர்த்தி. இதேபோல காடுவெட்டிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் துரைசாமி. இவர்களிடம் செல்போனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது ஓட்டலில் சட்டவிரோதமாகமது விற்பனை செய்வதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தலா ரூ.10 ஆயிரம் ஆன்லைனில் ” கூகுள் பே” மூலம் வழங்குமாறு மிரட்டியுள்ளார். இதனால் அவர்கள் 2பேரும் தனித்தனியாக இது குறித்து கருமத்தம்பட்டிகாவல் நிலையத்தில்புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி அன்னூரை அடுத்த நீலகண்டன் புதூரை சேர்ந்த சேகர் ( வயது 31 )என்பவரைகைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0