சைக்கிளில் சென்றவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை. 6 பேர் கைது .

கோவை செல்வபுரம், ராமமூர்த்தி ரோடு,60 அடி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் ( வயது 49) இவர் தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.நேற்று இவர்களுக்கு ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக தனது சைக்கிளில்செல்வ சிந்தாமணி குளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர். கொடுக்குமறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி இவரது சட்டை பையில் இருந்த 1,220 ரூபாயை கொள்ளை யடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அப்துல்ரஹீம் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்த நவீன் குமார் (வயது 22) கோவை புதூர் கோகுலம் காலனியை சேர்ந்த தீபக் குமார் என்ற ஸ்கை தீபக் (வயது 19 )செல்வபுரம் சண்முகராஜபுரத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் என்ற விக்கி ( வயது 23)அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் உள்பட மொத்தம் 6பேரை கைது செய்தனர். இவர்களில் 3பேர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.