காதல் திருமணம் செய்த பெண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை. காதலன் கைது.

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பேஸ் -1 பகுதியைச் சேர்ந்தவர் கலிம். இவரது மகள் ஆயிஷா சித்திக்கா ( வயது 19) இவர் பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜி .கே . டி. நகரில் பாட்டி வீட்டில் தங்கி இருந்து குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார் .அந்த நேரத்தில் ஜி. கே. டி. நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சதீஷ்குமார் (வயது 31)என்பருடன் காதல் ஏற்பட்டது.இந்த நிலையில் 24-10 -24 அன்று ஆயிஷா சித்திகா திடீரென்று மாயமானார்இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.இந்த நிலையில்.இவர் சதீஷ்குமாரை காதல் திருமணம் செய்து கொண்டார்.இருவரும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்றனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள்.பின்னர் ஆயிஷா சித்திக்கா ரத்தினபுரியில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 11 – 11 – 24அன்று ஆயிஷா சித்திக்கா தன்விருப்பப்படி அங்கிருந்து வெளியே வந்து சதீஷ் குமாருடன் சென்றார்.. அவரை சதீஷ் குமார் அறையில் அடைத்து வைத்துசித்திரவதை செய்தாராம். தடி மற்றும் பெல்ட்டால் தாக்கினாராம்.இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது.ஆசா சித்திக்கா அங்கிருந்து தப்பிதனது தாயாரிடம் நடந்தவைகளை கூறினார்.இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், அடைத்து வைத்தல் தாக்குதல் உட்பட 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.