வால்பாறையில் சுற்றுலா வந்த கேரளா தம்பதியினர் கார் கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தற்போது பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கேரளா மாநிலம் பட்டாம்பி அடுத்துள்ள கூட்டநாடு பகுதியை சேர்ந்த சைனுதீன் அவரது மனைவி ஆசீனா மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளுடன் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்து வால்பாறை பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நீரார்அணைக்கு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது சிறுகுன்றா இடைச்சோலை என்ற பகுதி அருகே எதிரே வந்த மற்றொரு காருக்கு வழி ஒதுக்கியபோது எதிர்பாராத விதமாக ஒருகல்லின் மீதுஏறி நிலைதடுமாறி 10 அடி பல்லத்தில் சென்று அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிய நிலையில் சிக்கியது. இந்த விபத்தை அறிந்த அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகளும், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான காவல்துறையினரும் காரில் இருந்தவர்களை உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் முதலுதலவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலை யில் விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.