கோவை, தடாகம் அருகே கணுவாய் பகுதியில் மகேஷ் என்பவர் வீட்டருகே உள்ள தோட்டத் தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த 15 – க்கும் மேற்பட்ட யானை கூட்டம் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளத்தை சூறையாடியது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் வாகனங்களில் ஒலியை எழுப்பி அதனை நீண்ட நேரம் போராட்ட த்திற்கு பின்பு சோமியம்பாளையம், வசந்தம் நகர் பகுதியில் இருந்து யானை கூட்டத்தை அண்ணா பல்கலைக் கழகம் பின்புறம் பவர் ஹவுஸ் பகுதி வழியாக வனப்பகுதி நோக்கி அந்த யானை கூட்டத்தை விரட்டினர் வனத் துறையினர் . மேலும் மனித – விலங்கு மோதல் ஏற்படாமல் இருக்க, வசந்தம் நகர் பகுதி மக்கள் தனியாக நடந்து செல்வதையும், வாகனத் தில் செல்வதையும் இரவு நேரங்களில் தவிர்க்குமாறு வனத்துறை அறிவித்து உள்ளனர். இதனால் இரவு முழுவதும் இந்த யானை கூட்டத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சம் அடைந்து உள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0