தாய் யானை இறந்த பிறகு குட்டியை சேர்க்க மறுக்கும் யானைகள் கூட்டம்.

கோவை தடாகம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியில் விளை நிலத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மீட்கப்பட்டது. அந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அப்போதுதான் அதன் தாய் யானைஅமர்ந்த நிலையில் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇதையடுத்து அந்த குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டம் இந்த குட்டியானை சை சேர்த்துக் கொள்ளவில்லை.தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் வனத்துறையினர் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டனர். அந்த முயற்சி யும் தோல்வியில் முடிந்தது .இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-குட்டி யானையின் தாய் உயிரிழந்து விட்டநிலையில் அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். அந்த யானைகள் கூட்டத்தில் ஏற்கனவே குட்டியுடன் இருக்கும் பெண் யானை கள் இருப்பதால், இந்த குட்டியையும் சேர்த்துக் கொண்டால் குட்டிக்கு, தேவையான தாய்ப் பால் மற்றும் பாதுகாப்பு தாராளமாக கிடைக்கும் எனவே தான் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மாலையில் வனப்பகுதிக்குள் குட்டி யானையை நிறுத்தி கண்காணித்தோம். ஆனால் மீண்டும் யானைகள் கூட்டம் அந்த குட்டி யானையை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் மீண்டும் இரவு நேரத்தில் நிறுத்தி கண்காணிக்கப் படும். அதன் பின்னரும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் அந்த குட்டி யானையை எங்கு கொண்டு செல்வது? என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். தற்போது அந்த குட்டி யானை நலமுடன் சுறுசுறுப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.