கோவை மதுக்கரை பக்கம் அரிசி பாளையம் போர்ட் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் அஜித் குமார் (வயது 24 )பி. எஸ். சி. பட்டதாரி . இவர் கடந்த 6 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் திருமணிக்கனி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0