கோவை அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோவை வடக்கு தாலூகா அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டார். கோவை வ. உ .சி .மைதான எல்.ஐ.சி .சிக்னல் அருகே வந்தபோது அந்த ஸ்கூட்டரில் பின்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு குதித்து தப்பினார். இதையடுத்து அந்த ஸ்கூட்டரில் தீப் பிடித்து எரிந்தது. அதை பார்த்த அக்கம் -பக்கத்தினர் ஓடி வந்து மண்ணை எடுத்து ஸ்கூட்டர் மீது அள்ளி வீசி தீயை அணைக்க முயன்றனர். சிலர் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினார்கள். ஆனாலும் அதற்குள் ஸ்கூட்டர் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0