கோவை; பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று மதியம் அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது,இதை யடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாகநிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0