வால்பாறையில் காட்டு யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழப்பு.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதி நெடுஞ்சாலையில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கடந்து. சென்ற ஜேர்மனி நாட்டை சேர்ந்த மைக்கேல் வயது 60 என்ற சுற்றுலா பயனியின் இருசக்கர வாகனத்தை அங்கிருந்த காட்டுயானை திடீரென்று தாக்கியுள்ளது. இதில் இருக்கர வாகனம் சாலையின் மறுபுறம் தூக்கி வீசப்பட்ட நிலையில் வாகனத்திலிருந்து விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை காட்டுயானை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அந்த காட்டுயானையை விரட்டி விட்டு படுகாயமடைந்த அவரை மீட்டு வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.