வாங்கிய 10 லட்சத்தை திருப்பி தராததால் காவலாளியை கடத்திய நண்பர்..!

கோவை மாவட்டம் காரமடை புச்சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 32).
இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
மேலும் இவர் தனது நண்பர் முத்தையா என்பவருடன் சேர்ந்து பழைய கார் வாங்கி
விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு
முன்பு அஜித், முத்தையாவிடம் ரூ. 10 லட்சத்தை வாங்கியதாக தெரிகிறது.
ஆனால் அவர் இதுவரை அந்த பணத்தை முத்தையாவிடம் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்க இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று முத்தையா தனது 3 நண்பர்களுடன் அஜித்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது முத்தையா அவர்கள் வந்த காரில் அஜித்தை அழைத்து சென்றார். அழைத்து
சென்று 4 நாட்களாகியும் அஜித் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அஜித்,
முத்தையாவின் செல்போனில் இருந்து தனது தந்தை ராஜேந்திரனுக்கு அழைத்தார்.
அப்போது தான் வலுகட்டாயமாக அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வக்கீலுக்கு தான் பாதுகாப்பு இல்லாமல் இருக்கீறேன் என
மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த தகவலை கேட்டு அஜித்தின் மனைவி அதிர்ச்சி
அடைந்தார். உடனே இதுகுறித்து அவர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார்
அளித்தார்.
போலீசார் ஆள் கடத்த வழக்குப்பதிவு செய்து அஜித்தை தேடி வருகின்றனர்.
வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.