கோவையை அடுத்த சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் இராஜலட்சுமி, இவரது கணவர் தேவராஜன், இவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக உள்ள பொன் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. தற்சமயம் அந்த கோவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் சுற்றுச்சுவர் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த சுற்றுச்சுவரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தனது குடோன்களுக்கு செல்வதற்கு இடையூறாக இருப்பதாக கூறி பெரிய வாகனங்கள் செல்லும் அளவிற்கு கோவிலில் சுற்றுச்சுவரை இடித்து கட்டி வருவதாக தெரிகிறது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் அறங்காவல் கமிட்டி நிர்வாகத்தினர் இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ்டம் கேட்கும் போது நான்தான் இந்த ஊரின் தலைவர் எனது இஷ்டப்படி தான் செய்வேன் மீதி ஏதாவது கேட்டால் தொலைத்து விடுவேன் என்று கோவில் கமிட்டி நிர்வாகத்தினரையும், பொது மக்களையும் மிரட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து கோவில் கமிட்டி நிர்வாகிகளும், பொதுமக்களும் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் ஊராட்சி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர். அதனையடுத்து சம்பவ இடத்தில் பீளமேடு காவல் ஆய்வாளர் கந்தசாமி, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், இருகூர் கிராம நிவாக அலுவலர் உதயராணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0