கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:- கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கோவையில்போக்குவரத்து விதிகளை மீறியதாக 3லட்சத்து 20 ஆயிரத்து935 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.26 கோடியே 32 லட்சத்தி 99 ஆயிரத்து 190 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் ரூ.6 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 950 வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 5,045வழக்குகளும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 474வழக்குகளும், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 2,882 வழக்குகளும் , சிக்னலை மதிக்காமல் சென்றதாக 10 ஆயிரத்து 265 வழக்குகளும் பதிவாகி உள்ளது. மாநகர பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் விபத்துக்கள் நடப்பதை கண்டிப்பாக தடுக்கலாம். வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0