கோவை ,சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த செப்டம்பர் வரை ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனையில், ஓசியில் பயணம் செய்த நபர்களிடம் அபராதமாக ரூபாய்.1,67,13,354 வசூலித்தது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு,நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள்,ரயில்களிலும் ,ரயில் நிலைய வளாகங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர் . இந்த சோதனை களின் போது, பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கு அபராதம் விதிக்கின்றனர். டிக்கெட் இல்லாது ரயிலில் பயணம், ஒழுங்கற்ற முறை பயணம் , முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்களுக்கு அபராதம் வசூலிக்கபட்டது இது கடந்த செப்டம்பர் வரை டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் 13,553 நபர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்டறிந்து அவர்களிடம் ரூபாய். 1,01,87,158/- அபராதமாக வசூலித்தனர். மேலும், செப்டம்பர் மாதத்தில் 14,590 முறை கேடான பயணம் செய்த பயணிகளிடம் அபராதமாக ரூபாய்.64,81,870 வசூலிக் கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் வரை 58 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் சென்றதை கண்டுபிடித்து அபராதமாக ரூபாய்.44,326 வசூலித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0