வால்பாறையில் வட்டார அளவிலான ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஜாக்டோ- ஜியோ வின் வட்டார அளவிலான மாலை நேர ஆர்ப்பாட்டம். வால்பாறையிலுள்ள ஸ்டான்மோர் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்துசெய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்க ஆசிரியர் கூட்டணி வால்பாறை செயலாளர் வசந்தகுமார் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் பரமசிவம், தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் இராஜபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் பன்னீர் செல்வம், தமிழக ஆசிரியர் கூட்டணி ரஞ்சித்குமார், உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரிசங்கம் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் ஜோய் ஆகியோர் சிறப்புரையாற்றினர் ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் முத்தையா சாமி நன்றி கூறினார்.