கோவையை அடுத்தஆலந்துறை பக்கமுள்ள உரிப்பள் ளம் புதூர் அருகே அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலந்துறை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் ஆலந்துறை சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 7 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கரடி மடையைச் சேர்ந்த கனகராஜ் (வயது 40) கள்ளிமேட்டைச் சேர்ந்த செல்வம் ( வயது 55 )ஆலந்துறையை சேர்ந்த கந்தசாமி ( வயது 52 )பூலுவ பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 56) தென்னமநல்லூரை சேர்ந்த கவுதம் ( வயது 38) மத்வராய பரத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் பிரதீப் ( வயது 37) ராஜசேகரன் (வயது 45) என்பது தெரிவந்தது. இவர்களிடமிருந்துசீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 2 லட்சத்து 51 ஆயிரம் பணமும், மற்றும்3 இருசக்கர வாகனங்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0