ரூபாய் 80 லட்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அன்பளிப்பாக தான் என நாடகம் ஆடிய தம்பதிகள் கைது

ஆவடி: பணம் வருகின்ற வழி தெரியாமல் புறநகர் பகுதிகளில் போடுகின்ற ஆட்டம் இருக்கிறதே அப்பப்பா தாங்க முடியாது.அபுதாபியில் அரசு நிறுவனத்தில் மூத்த மரைன் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஏ. எல். கலைமணி வயது 63. தகப்பனார் பெயர். பி. ஆர். அழகுராமலிங்கம்.ராஜேஸ்வரி நகர் சென்னை 19.என்பவர்20.6.2024ம் தேதி புகார் மனு கொடுத்தது சம்பந்தமாக ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏ. எல். கலைமணி வீட்டின் அருகே வசித்து வரும் குணசேகரன் தகப்பனார் பெயர் புருஷோத்தமன் என்பவன் கலைமணியின் மனைவி அம்மு என்பவருக்கு சிறு வயது முதலே குணசேகரனை நன்றாக தெரியும். குணசேகரன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கலைமணி அபுதாபியில் இருந்த சமயம் கலை மணியிடம் பணத்தை கடனாக குணசேகரன் கேட்டு வாங்கி வங்கியை விட அதிக வட்டி தருவதாக தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 2019 முதல் செப்டம்பர்2020 வரை ரூபாய் 80 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அழகுமணி பணத்தை திருப்பி கேட்டதற்கு கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.கலைமணி குணசேகரன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்ட பொழுது பணத்தை கடனாக வாங்க வி ல்லை. அன்பளிப்பாக தான் கொடுத்தீர்கள். பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக பேசியதாக கொடுத்த புகாரின் பேரில் இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா கடுமையான விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பி. பெருமாள்நேரடி மேற்பார்வையில் பயங்கரமான பிராடுகள் 1. பி.குணசேகரன்வயது 57. தகப்பனார் பெயர் புருஷோத்தமன். எம்டிஎச் ரோடு பஜார் தெரு வரதராஜபுரம் அம்பத்தூர் சென்னை.2.வெங்கடேஸ்வரி வயது 52.கணவன் பெயர் குணசேகரன். எம் டி எச் ரோடு பஜார் தெரு வரதராஜபுரம் அம்பத்தூர் சென்னை. ஆகிய இரு கேடிகளையும் கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.