ஒரு தனியார் நிறுவனத்தில் ஹிமான்ஷு என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தன்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி 2 பேருக்குமே தங்களுடைய வேலை பிடிக்காததால் சொந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முடிவு செய்தனர். அவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது தான் தேனீ வளர்க்கும் தொழிலில் ஈடுபடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் தேனீ வளர்ப்பு தொழில் குறித்து கிருஷி விக்யான் கேந்திரா அமைப்பிடம் கற்றுள்ளனர்.
அதன் பின்னர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கணவன்-மனைவி இரண்டு பேரும் தேன் பண்ணை அமைத்துள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் குறைவான அளவு தேன் உற்பத்தி செய்யப்பட்டாலும் படிப்படியாக தேன் உற்பத்தியில் நல்லதொரு மாற்றம் நடந்துள்ளது. மேலும் தற்போது ஒரு மாதத்திற்கு 300 கிலோ வரை தேன் உற்பத்தி செய்கின்றனர். இதனால் ஒரு மாதத்திற்கு 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இதனால் ஒரு வருடத்திற்கு மட்டுமே தேன் உற்பத்தி மூலம் ரூ. 1.4 கோடி வருமானமாக கிடைக்கிறது.