கோவை ஓட்டலில் பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஆர். எஸ். புரம். சின்ன எல்லை சந்து பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் ( வயது 31 )பி. எஸ். சி, பயோ டெக் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை இந்த நிலையில் நேற்று ஆர். எஸ். புரம். பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் .அந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மின்விசிறியில் பெட்ஷீட்டைக் கட்டிசூரிய பிரகாஷ் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இது குறித்து ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.