இந்திய அளவில் சதுரங்க விளையாட்டை போன்ற பயர் கோ விளையாட்டுகள் மேலை நாடுகளில் மிக பிரபலம் தற்போது சமூக வலைதளம் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பயர் கோ விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றது, இதில் பீகாரை சேர்ந்த பயர்கோ விளையாட்டு கழகத்தினர் தேசிய அளவில் பயர்கோ விளையாடடு போட்டிகளை மாணவ,மாணவிகள், மத்தியில் நடத்தி வருகின்றனர் , இந்த ஆண்டு 2 வதுதாக தேசிய சாம்பியன் ஷிப் போட்டிகளை ,செப் 2 ம் தேதி முதல் 4ம்தேதி வரை மூன்று நாட்களாக பீகார் மாநிலம் போஜ்பூர் ஆராவில் மூன்று பிரிவுகளாக, சீனியர், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் என குழுக்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்காக வந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர், பலகட்ட போடடிகளில் வெற்றி கண்ட தமிழக குழுவினர் சீனியர் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி -பீகார் அணியுடன் பயர்கோ விளையாடினர், இதில் தமிழ்நாடு 46 புள்ளிகளும் மற்றும் பீகார் 43 புள்ளி களும் பெற்றனர் ,சீனியர் பிரிவில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழகம் முதல் இடம் பிடித்தது, இந்த சீனியர் பிரிவுகளில் கதிர்வேல், லட்சணா ஆகியோர் விளையாடினர்.
தொடர்ந்து ஜூனியர் இறுதிப் போட்டிகளில் தமிழ்நாடு அணி தகுதி பெற்று தெலுங்கானா அணியுடன் விளையாடினர் இதில் தமிழ்நாடு 38 புள்ளிகளும் , தெலுங்கானா 14 புள்ளிகள் பெற்றன ,24 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜூனியர் பிரிவில் தமிழகம் முதல் இடம் பிடித்தது இதில் ஜூனியர் பிரிவுகளில் அபினோவ் மற்றும் லக்சனா விளையாடினர். சப் ஜூனியர் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய தமிழ் நாடு அணியினர் ஆந்திராவுடன் விளையாடினர் இதில் தமிழ்நாடு 11 புள்ளிகளும் , ஆந்திரப் பிரதேசம் 18 புள்ளிகளும் பெற்றது இதில் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆந்திரப் பிரதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழகம் 3 இடம் பெற்றது , சப் ஜூனியர் பிரிவுகளில் சஞ்சய் மற்றும் லக்சனா விளையாடினர்.இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்ற கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியான லக்சனா உட்பட தேசிய பயர்கோ விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் ரயில் மூலம் ஞாயிறு காலை 9.00 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து இறங்கினர்,ரயில் நிலைய வாசலில் பயிற்சியாளர்கள் ,பெற்றோர்கள், நண்பர்கள், இனிப்புகள் கொடுத்தும், மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்கள், இதில் அங்கே கூடியிருந்த பொதுமக்கள், பயணிகளும் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினார்கள்.