நீலகிரி ஆட்சியரிடம் வயநாடு மக்களுக்கு பிக்-அப் ஸ்டேண்டு சார்பாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களிடம், கனமழையால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதகை மாரியம்மன் கோவில் பிக்-அப் ஸ்டேண்டு ஊரிமையாளர்கள் ஓட்டுநர்கள் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள், கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பும் பொருட்டு,
ரூ.20 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையினை வழங்கினார்கள்.