தஞ்சாவூர் நவம்.6,வசதி படைத்த வீட்டு பிள்ளைகள் உடுத்தும் ஆடையை பார்த்து சாமான்ய வீட்டு பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பது உண்டு. சாமான்ய வீட்டு பிள்ளைகளின் ஏக்கத்தை போக்க வேண்டும் என நினைத்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க நினைத்து அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை பிரபல ஜவுளிக் கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்த புத்தாடைகளை வாங்கி கொடுத்து மகிழ்வித்தது.
தஞ்சையில் செயல்பட்டு வரும் ஜோதி தொண்டு நிறுவனம் மிகவும் பின்தங்கிய பள்ளியில் படித்து வரும் ஏழ்மையான மாணவ,மாணவிகள்,மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கி கொடுக்க முடிவு செய்தது.
அதன்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள திப்பியக் குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த 17 மாணவ,மாணவிகளை தேர்ந்தெடுத்து வேன் மூலம் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களுடன் மாணவ,மாணவிகளை அழைத்து வந்த ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனம் பிரபல ஜவுளிக்கடை க்குள் அவர்களை விட்டு உங்களுக்கு பிடித்தமான ஆடைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக்கலாம் விலை பற்றி யோசிக்க வேண்டாம் என கூறியதும்.
மாணவ, மாணவிகள் ஆர்வமுடன தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை முகமலர்ச்சியுடன் எடுத்து கொண்டனர்.
அதேபோல 50 பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை எடுத்து கொண்டு நேரடியாக சென்று தஞ்சையில் உள்ள பார்வை குறைபாடு உடையோர் பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கி அவர்களையம் மகிழ்வித்தது ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனம்.