இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது இரு பிரிவினர் இடையே வெறுப்பை ஏற்படுத்த முயலுதல் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு

கோவையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது எக்ஸ் தளத்தில் சமூக வலைதள பதிவு செய்திருந்தார். செல்வபுரம் காவல் நிலைய
உதவி ஆய்வாளர் தினேஷ் பாபு சமூக வலைதளத்தை பார்த்த போது மதரீதியாக இரு சமூகங்களுக் கிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் அர்ஜூன்சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுதல், மதம்,இனம் சாதி ரீதியில் பிரிவுகளுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முயலுதல், தவறான தகவல்கள், வதந்திகளை பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…