கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் துளசி மணி. பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று உக்கடம் சென்று விட்டு கருமத்தம்பட்டிக்கு தனது சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை டிரைவர் நவீன் ஒட்டினார். கோவை அவிநாசி ரோட்டில் அரசூர் அருகே ஒரு தனியார் ஓட்டல் முன் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பகுதிலிருந்து திடீரென்று புகை வந்துள்ளது. உடனடியாக சர்வீஸ் சாலைக்கு சென்று டிரைவர் காரை நிறுத்தினார். பின்னர் அவர் காரின் முன் பகுதியை திறந்து பார்க்க முயன்றார். அப்போது கார் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே காரில் இருந்த துளசி மணி வேகமாக கீழே இறங்கினார். இதனால் அவர்கள் 2பேரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0