2 குழந்தைகளுடன் வியாபாரி மனைவி திடீர் மாயம்

கோவை வடவள்ளி அருகே உள்ள மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் ராஜு (வயது 40) ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 28) இவர்களுக்கு மணிஷா (வயது 8 )டிம்பிள் (வயது 5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ராஜு கடைக்கு சென்று விட்டார்.இரவில் திரும்பி வந்து பார்த்தபோது மனைவி மற்றும் 2 மகள்களை காணவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து ராஜு வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.