நீலகிரி மாவட்டம் உதகை நொண்டி மேடு 34 ஆவது வார்டு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு பேருந்து நிழற்குடை இல்லாமல் கோடை வெயில் மற்றும் மழைக்காலத்திலும் மிகுந்த சிரமத்திற்குள் கடந்து வந்த மக்களின் தேவைகளை அறிந்து தனியார் கிரசன்ட் பள்ளி தானாக முன்வந்து மக்களுக்கு பேருந்து நிழல் குடை அமைக்க ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து, சிறப்பாக பணிகள் முடிவடைந்தன. உதகை நகராட்சிக்குட்பட்ட 34 வது மற்றும் 32 வது பகுதியான நொண்டி மேடு பகுதியில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பேருந்து நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும் மழைக்காலங்களிலும் முதியவர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வரை கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர். இதனை அறிந்த பிரபலமாக இயங்கி வரும் உதகை
கிரசென்ட் பள்ளியின் தாளாளர் முகமது ஃபாரூக் முயற்சியில் அப்பகுதி மக்களுக்காக புதிய பேருந்து நிழற்குடை கட்டித் தரப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், கிரசண்ட் பள்ளி தாளாளர் உமர் பாரூக், நகரமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, செல்வராஜ், எல்கில் ரவி, கஜேந்திரன், விஷ்ணு மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0