85 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்த கொடூர ஆசாமி கைது. தப்பி ஓட முயன்ற போது கை – கால் முறிந்தது.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் 85 வயது மூதாட்டி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்து பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் – மகள் நகர பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வார இறுதி நாட்களில் தாயை பார்க்க வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ஒரு ஆசாமி மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து அவரை மிரட்டி 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின்அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.வீட்டில் பதிந்திருந்த கைரேகையை ஆய்வு செய்தபோது அது பழைய குற்றவாளி ஒருவரின் ரேகை என்பது தெரிய வந்தது..இது தொடர்பாக கோவை இடையர்பாளையம், அண்ணா நகரை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 24) என்பவரை போலீசார் தேடிவந்தனர் .நேற்றுஅவரை கைது செய்ய போலீசார் சென்றனர்.அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். போலீசார் துரத்தி சென்றனர். அப்போது திடீரென்று அந்த நபர் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார் .இதில் அவருக்கு இடது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை யடுத்து போலீசார் சாகுல் அமீதுவை சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில்கொள்ளையரிடம் விசாரணை நடத்திய போது கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவனிடம் இருந்து செல்போனை பறிமுதல்செய்தனர். போலீசார் அதனை ஆய்வு செய்தபோது வீடியோ ஒன்று இருந்தது. அதில் அந்த ஆசாமி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவில் பதிவு செய்துள்ளார். பின்னர் மூதாட்டியை மிரட்டி பீரோவில் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார் .இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து சாகுல் ஹமீது மீது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், கொள்ளையடித்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைதான சாகுல் ஹமீது மீது சூலூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,அவிநாசி, காமநாயக்கன்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து நகையை கொள்ளையடித்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.