தீக்குளித்து 92 வயது மூதாட்டி தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி தனம்மாள் (வயது 92) இவர்கடந்த 3 ஆண்டுகளாக தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தான் உடுத்தியிருந்த ஆடையில் தீதீக்குச்சி உரசி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் இறந்தார் .இது குறித்து அவரது மகள் கலாவதி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.