கோவையில் 70 வயது முதியவர் தூக்கு போட்டு தற்கொலை..!

கோவை துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 70) இவரது மனைவி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டதால் முத்துசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு இருதய நோய் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மகள் ஜோதி மணி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகிறார்கள்.