கோவை பேரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமியை செல்வக்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் செல்வகுமாரை கையும் களவுமாக பிடித்து நேற்று இரவு பேரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் யாரும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்வகுமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனக் கூறி பேரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதை அறிந்த பேரூர் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .மேலும் அவர் பேரூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினாராம் .இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பேரூர் போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டசம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0