கோவை : அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 20) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .இவர் அதே பகுதியை சேர்ந்த 5வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . இதனால் சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்றான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் ,அதன் காரணமாக சிறுவனின் உடலில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து பேரூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துஜலாலுதீனைகைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0