கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணு க்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் குமார் மற்றும் முரசொலிஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் அந்த பெண் உட்பட 3 பேரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசம் இருந்து வந்தனர். இந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளாள் .இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் சிறுமி முன் உல்லாசமாக இருந்துள்ளனர்.. அப்போது மனிஸ் குமார் மற்றும் முரசொலி ஆகி யோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார் அதை கேட்ட சிறுமியின் தந்தை கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக் காதலர்கள் மனிஷ்குமார் முரசொலி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0