கோவையில் பெய்த கன மழையால் 20 ஆண்டு பழமையான மிகப்பெரிய வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது.!!

கோவை துடியலூரில் இன்று மதியம் பெய்த கனமழையால் அம்பிகா நகர் பகுதியில் இருந்த 20 ஆண்டுகளான மிகப்பெரிய வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் எந்த வித காயமும் ஏற்படவில்லை
கோவை துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மதியம் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அம்பிகா நகர் பகுதியில் இருந்த 20 ஆண்டுகள் ஆன மிகப்பெரிய வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. மாந்கராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.