கோவை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சூலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பள்ளிக்கூடத்தில் படித்த போது பழக்கம் ஏற்பட்டது. சம்பவ வத்தன்று அந்தசிறுவனின் பாட்டி வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் ஆசை வார்த்தை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அவர் சிறுமியை கோவை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைக் கேட்டு சிறுமியின் தயார் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் கடந்த 28-ஆம் தேதி சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.