கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகரன்.இவரது மனைவி சசிகலா (வயது 38 )இவர் பள்ளிக்கூட ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .இவரது 12 வயது மகள் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் 1 – 30 மணிக்கு அவரது வீட்டில் தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென்று காணவில்லை. எங்கோ மாயமாகி விட்டாள். இது குறித்து மாணவியின் தாயார் சசிகலா கோவை கிழக்கு பகுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0