படுக்கையில் இருந்துவிழுந்து 10 வயது சிறுமி சாவு.

கோவை தெலுங்கு பாளையம் பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரதுமகள் அனுஸ்ரீ ( வயது 10)இவர் உடல்நல குறைவால் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார் வீட்டில் படுத்திருக்கும் போது படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்தார்.சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை எடுத்துச் சென்றனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து தட்சிணாமூர்த்தி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார்.இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.