கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமி செட்டிப்பாளையம், சின்ன கண்ணன் புதூர் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (வயது 60) சந்திரசேகர் ( வயது 40) பண்ணாரி ( வயது 65) ரங்கசாமி (வயது 65) நடராஜர் (வயது 65) தண்டபாணி ( வயது 48) காமாட்சி மணி ( வயது 57) சுகுமார் (வயது 49) காளியப்பன் ( வயது 70) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணமும் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0