பாஜக மாநில செயலாளர் சரவணகுமார் கட்சியில் இருந்து விடுவிப்பு – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு..!

மிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சரவண குமார் அவரது விருப்பத்தின் பெயரில் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு. S. சரவண குமார் Ex.IRS அவர்கள் சொந்த காரணங்களுக்காக பாஜகவின் கட்சி பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தொடந்து கட்சியின் கொள்கையான தேசியம் மற்றும் தெய்வீகத்திற்கு பணி செய்வதாகவும் கடிதம் கொடுத்துள்ளார்.

அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். மத்திய அரசின் உயர் பதவியினை துறந்து தேசப் பணிக்காக கட்சியில் இணைத்து இதுநாள் வரை சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். சொந்த பணியினை விரைவில் முடித்து தேச முன்னேற்றத்திற்கு நல்ல பொறுப்புக்களை ஏற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.