திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை பாஜக மகளிர் அணியினர் புகார்..!

கோவை : பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெய் ஸ்ரீ தலைமையில் மகளிர் அணியினர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தி.மு.க.வைச் சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்து தர குறைவாக பேசி யூடியூப் சேனலில் அவதூறு வீடியோ வெளியிட்டுள்ளார் .இது வானதி சீனிவாசனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சட்டம் -ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது. எனவே அந்த யூடியூப் சேனலை முடக்குவதுடன் அந்த வீடியோவை நீக்கி குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.