கரூரில் 2வது நாளாக தொடரும் வருமான வரி ரெய்டு.!!

மிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது , வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே 26 ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை வருமான வரி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு , செந்தில் பாலாஜியின் உதவியாளர், ஆடிட்டர் ,உறவினர் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் பின்னர் செந்தில் பாலாஜி அலுவலகம் மற்றும் சகோதரரின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அமலாக்கத்துறையின் சோதனையின் தொடர்ச்சியாக, CISF படை பாதுகாப்புடன் மீண்டும் கரூரில் களமிறங்கிய வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் ஜவகர் பஜாரில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அத்துடன் பழனி முருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.