கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீரென பற்றி எரிந்த தீ – பயணிகள் பத்திரமாக மீட்பு..!

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகளிடையே சற்று பரபரப்பு நிலவியது..

நேற்று இரவு 9.12 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள சோதனைப் பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புகையின் காரணமாக சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், நிலைமை கட்டுக்குள் வந்த பிறகே சிறிது தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டாவதாவது:

தீ விபத்து ஏற்பட்டு உடனே பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து காரணமாக விமான சேவையில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரவு 9.40 மணியளவில் தீ அணைக்கப்பட்ட பிறகு சோதனைப் பகுதியில் சேவை மீண்டும் தொடங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.