உதகை படகு இல்லத்தை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்..!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் சாகச விளையாட்டிற்காக நடைபெற்று வரும் பணிகளை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், படகு இல்லம் மேலாளர், அரசு அலுவலர்கள் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் உட்பட பலர் உள்ளனர்.