கோவை வாலிபரை திருமணம் முடித்து குடும்பம் நடத்தி ரூ.6.50 லட்சம் மோசடி – நகை பட்டறை ஊழியர் மீது பரபரப்பு புகார்.!

கோவை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது வாலிபர். சமையல் வேலை செய்து வருகிறார். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் செல்வபுரம் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த 27 வயதான நகை பட்டறை ஊழியருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. எனக்கு பெண்மை தன்மை கொண்ட சோகம் உண்டு. இதை என்னுடன் பழகிய நண்பர் தெரிந்து கொண்டார் . இதனால் அவர் என்னிடம் நாம் தாலி கட்டி கணவன் -மனைவி போன்று ஒன்றாக வாழலாம் என்று கூறினார். இதை நான் ஏற்றுக் கொண்டேன். இதையடுத்து அவர் எனது அறையில் வைத்து எனது கழுத்தில் தாலி கட்டினார். அதன் பிறகு அவர் என்னிடம் பல தடவை பாலியல் உறவு வைத்துக் கொண்டார் .பின்னர் அவர் திடீரென்று நான் நகை பட்டறை வைக்கப் போகிறேன் . எனக்கு பணம் தேவைப்படுகிறது .கொடு என்று கேட்டார் .உடனே நான் என்னிடமிருந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன். இப்படி என்னிடமிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் வாங்கினார் .அதன் பின்னர் அவர் எனது அறைக்கு வருவதில்லை. நான் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார் .உடனே நான் விசாரிக்கும் போது அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே திருமணத்தை மறைத்து எனக்கு தாலி கட்டி வாழ்க்கை நடத்தி என்னிடமிருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நகை பட்டறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் என்னிடம் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்..