கோவை: ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் லட்சுமணராவ் இவரது மகன் டிஜேஸ்வர்ராஜ் ( வயது 15) ஆந்திராவில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரவணம்பட்டி ஜி .கே எஸ் .நகரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வரும் தனது பெற்றோரிடம் கோடை விடுமுறைக்காக வந்திருந்தார். நேற்று தனது நண்பருடன் சரவணம்பட்டி ஸ்ரீநகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தினார்கள்.வாகனம் ஓட்டியவர் அவர்களிடம் மணி என்ன ?என்று கேட்டார் .அந்த மாணவன் டைம் பார்த்து சொல்லும் போது பின்னால் இருந்தவர் இறங்கி வந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடமுயன்றார் இதை தடுத்த போது டிஜேஸ்வர்ராஜை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அவரது இரு கையிலும் காயம் ஏற்பட்டது .பின்னர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து டிஜேஸ்வர்ராவ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவ செய்து இருவரை தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0