ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்ககாசு திருட்டு- பெண்ணுக்கு வலைவீச்சு..!

கோவை அருகே உள்ள மதுக்கரை செக்குமரத்தோட்டம் வீதியை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57) ஒரு ஒத்தக்கால் மண்டபத்தில் முதுநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று டவுன்ஹாலில் உள்ள நகைக்கடையில் ஒரு பவுன் தங்க காசு வாங்கினார். பின்னர் காந்திபுரத்திலிருந்து குரும்பபாளையம் சென்று கொண்டிருந்த டவுன் பஸ்சில் ஏறினார்.குனியமுத்தூர் மைல் கல் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அவரது பையில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க காசை காணவில்லை.யாரோ ஓடும் பஸ்ஸில் திருடி விட்டனர் . இதுகுறித்து தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது அருகே பஸ்சில் நீல கலர் சேலை உடுத்தி சென்று கொண்டிருந்த 40 வயது பெண் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.