கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே கோர விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இந்த ரயிலின் சுமார் 10 பெட்டிகள் சரிந்து, அடுத்திருந்த ரயில் தடத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வந்த அதிவிரைவு ரயிலான யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒடிசா ரயில் விபத்தில் பலியானோருக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.