கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பூமிநாதன் .இவரது மகன் அருண்குமார் ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. மனைவி பெயர் வினோதினி ( வயது 29)அருண்குமார் டிசைனிங் வேலை செய்து வந்தார்.இந்தத் தொழில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் இரும்பு விட்டத்தில் நூல் கயிற்றைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி வினோதினி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.