கோவை சிறுவாணி ரோடு,ஆலந்துறை பக்கம் உள்ள மத்வராய புரத்தை , சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 30) இவர் பேரூரில் உள்ள ஒரு தனியார்கல்லூரியில் பி. காம், சி. ஏ .இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கல்லூரியில் அதே வகுப்பில் படித்து வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி ( வயது 20 )என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது .பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் . அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அவர்கள் 2பேரும் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள். மகளை காணவில்லை என்று ரமணியின் பெற்றோர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ரமணியை தேடி வந்தனர். இதற்கு இடையே ரமணி சஞ்சய் ஆகியோர் வேளாங்கண்ணி சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசார் தெரிவித்தனர் . 2 பேரும் செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். இருவரின் பெற்றோர் மற்றும் புதுமணத் தம்பதியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..அதற்கு ரமணி நான் காதல் கணவருடன் தான் செல்வேன் என்று உறுதியாக கூறினார். அவர்களை காதலன் சஞ்சயின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ரமணியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே காதல் தம்பதியை சஞ்சையின் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர் .இதை அடுத்து காதல் தம்பதி மத்வ ராயபுரத்துக்குசென்று குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு அங்கு கடந்த 24ஆம் தேதி திருமண வரவேற்பு நடத்தப்பட்டது ..ஏற்கனவே தந்தை தனது மகளை தொடர்பு கொண்டு உனது பொருள் வீட்டில் இருக்கிறது வந்து எடுத்து செல் என்று கூறியுள்ளார். அதற்கு நான் பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று ரமணி கூறியுள்ளார் இதனால் அவரை தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்து உள்ளார் .இந்த நிலையில் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டதால்தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொலை தொடர்பு கல்வி மூலம் படிக்க முடிவு செய்து நேற்று முன்தினம் விண்ணப்பம் வாங்க கோவை வந்தனர். பிற்பகலில் வீடு திரும்பினார்கள் அப்போது உடல் சோர்வாக இருப்பதாக ரமணி படுக்கைக்கு சென்று ஓய்வு எடுத்தார் .இரவில் சாப்பிடுவதற்காக சஞ்சய் சென்று பார்த்தபோது ரமணி மயங்கி கிடந்தார். அதிர்ச்சடைந்த அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரமணியை தூக்கி சென்றார் ..அவரை பரிசோதித் டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள் .அவரது உடல்கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட 21 நாளில் புதுப் பெண் மர்மமான உயிரிழந்ததால் இதுகுறித்து தெற்கு பகுதிஆர்.டி.ஓ பண்டரிநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ரமணி உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்ததும் அவரதுகுடும்பத்தினர், உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் ரமணி உடல லில் காயங்கள் இருப்பதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.,இதுகுறித்து போலீசார் கூறும்போது ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. வழக்கு பதிவு செய்து விசாரணைநட த்திவருகிறோம் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0